வாருங்கள்
வழக்காடுவேம் மறுமையிலே
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)
கோட்டைப்பட்டிணத்தைச்
சேர்ந்த அனைவருக்கும் இந்த மடல். அன்புள்ளம் கொண்ட கோட்டைப்பட்டிணம் வாழ் சகோதரர்களே
இந்த மடலின் மூலம் உங்களை சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இஸ்லாம்
ஒன்றை ஹராம்மாக்கினால் அது நமக்கும்தானே ஹராம்..? நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஒன்றை
தடைசெய்தார்கள் என்றால் அது நாமக்கும்தானே…? இஸ்லாம் தோன்றுவதர்க்கு முன்பு இருந்த
மூடப்பலக்கங்கள் அனைத்தையும் நபிகள் நாயகம்(ஸல்லல்) அவர்கள் தடைசெய்து இருக்கின்றார்கள்
அல்லவா…அப்படி இருக்கையில் இதை நாம் இன்றும் தொடர்ந்தாள்…? அதன் பொருள் நாம் இன்னும்
சரியாக மார்க்கத்தை விளங்கிக்கோள்ளவில்லையா அல்லது அதை தெரிந்தே நாம் செய்கின்றோமா..?
இஸ்லாம்
தடைசெய்திருக்கும் மது, விபச்சாரம், வீன் விரயம், ஆடல் பாடல், நம் சமுதாயப் பென்கள்
தன் கணவருக்கு காட்ட வேண்டிய அழகை மற்றவரகள் காண்பது போல் நடந்துகொள்வது (இதில் மாற்று
மததினரும் அடங்கும்) இப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய நாம் அனைவரும் உடந்தை
என்றால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா…? ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும் ஆம் நமதூரில்
வருடா வருடம் நடக்கும் கந்தூரி விழா தான் அது என்று இப்பொலுது உங்களுக்கு புரிந்திருக்கும்.
மது : நமதூரில் இருக்கும் மதுபானக்கடைகளுக்கு
கந்தூரி என்று வந்தால் கடை வாசலில் விழாக்கோலம்தான். என்றும் இல்லாத அலவுக்கு மதுபானங்கள்
இந்த குறிப்பிட்ட நாட்களில் விர்பனைகள் அமோகம் அல்லவா அதற்க்கு யார் காரணம்…? ராவுத்தரப்பா
ஒளியுல்லாவா அல்லது நாமா…? ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள் அருமை சகோதரர்களே. இப்படிப்பட்ட
இழிச்செயளுக்கு நாமும் ஓர் காரணம் தான்..! இது இஸ்லாத்தில் தடைசெய்ய்ப்பட்டதில் ஒன்று.
விபச்சாரம் : கந்தூரி என்று வந்துவிட்டால் நமதூரில் இருக்கும்
விபச்சாரிகளின் கல்லா நிறைகின்றதாம். இதற்காக வெளியூர்களில் இருந்தும் இரக்குமதியாம்
இவை இஸ்லாத்திர்க்கும் சத்திய மார்க்கத்திற்க்கும் தேவையான ஒன்றா..? ராவுத்தரப்பா ஒளியுல்லாவா
அல்லது நாமா…? ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள் அருமை சகோதரர்களே. இப்படிப்பட்ட இழிச்செயளுக்கு
நாமும் ஓர் காரணம் தான்..! இதுவும் இஸ்லாத்தில் தடைசெய்ய்ப்பட்டதில் ஒன்று.
வீன் விரயம் : நம் சகோதரர்கள் சிலபேர் இப்படி பெருமையடித்துக்
கொள்வதுண்டு எங்க ஊர்ள கந்திரிக்கு வாணவேடிக்கை மட்டும் இலட்ச்சங்களை தான்டும் என்பார்கள்…
ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள் சகோதரகளே நமது ஊரில் எத்தனைபேர் வயது வந்த பெண்களை
வைத்துக்கோண்டு திருமனம் செய்ய போதிய பொருளாதாரம் இல்லாமல் இருக்கின்றனர்..? எத்தனைபேர்
நல்ல மதிப்பொன் எடுத்தும் மேலும் படிக்க பொருளாதார நெருக்கடியில் படிப்பை தொடரமுடியாத
நிலை உள்ளது இவர்களுக்கு இந்த பொருளாதாரத்தை கொடுத்து உதவலாமே…
ஆடல் பாடல் : இது இஸ்லாத்தில் அனுமதித்த ஒன்றா…? இல்லை
அப்படியிருக்க ஆடல் பாடல் என்று கூரி இஸ்லாமியப் பொன்கள் மற்றும் ஆண்கள் மத்தியில்
அறைகுறை ஆடைகளுடன் ஆட்டம் பாட்டம் இதைச் செய்கின்றவர்களுக்கு நாள்ள வரவேற்ப்பு..! இப்படிப்பட்ட
அறைகுறை ஆடைகளுடன் பார்ப்பதர்க்கு அனைவரும் வெட்க்கப்படவேண்டாமா..? இல்லை இதை நடத்துபவர்கள்
இப்படி பார்க்க வேண்டும் என்றால் தங்கள் வீட்டில் வைத்து ஆடவிட்டு தன் குடும்பத்துடன்
பார்க்க வேண்டியதுதானே அதைவிட்டுவிட்டு இப்படி பொது இடத்தில் கூத்தாடிகளை வைத்து நள்ளபெயர்
வாங்க அவகளுக்கு வெட்க்கம் என்பது உண்டா என்பதில் எனக்கு மட்டும் அல்ல நமதூரின் மேல்
அக்கறை கொண்ட அனைவருக்கும் சந்தேகம் வழுக்கிறது.
இந்த
செயல்கள் தான் நம்மை சுவர்கத்திற்க்கு அலைத்துச்செல்லுமா..? நாம் கைச்சேதம் அடைந்தவர்களாக
ஆகிவிடுவோம். மரணம் எத நேரத்திலும் வரலாம் ஜாக்கிரதை.
இப்படிப்பட்டவர்கள்
ஏன் நமதூரில் ஏலை எளிய மக்களுக்கு பள்ளிகள் கட்டி அதுவும் இஸ்லாமிய அடிப்படையில் இலவசமாக
கொடுக்க முனவரக்கூடாது…?
சரி
இப்படிப்பட்ட செயல்களினால் நாம் தான் உணையான முஸ்லீம் என்று நிரூபிக்கமுடியுமா…? அல்லது
இப்படி செய்வதனால் ராவுத்தரப்பா உள்ளம் குழுந்து நீங்கள் கேட்டவற்றை தந்துவிடப்போகின்றார்களா…?
அல்லது இது எங்கள் ஊரின் பொருமை என்று பேசிக்கொள்ளும் பலருக்கு சுவர்ங்கம் தான் கிடைத்துவிடுமா…?
இது நமதூரின் அவமானச்சின்னம் அல்லவா…?
உங்கள்
சகோதரிகள், மணைவி மற்றும் அனைத்து இஸ்லாமியப்பெண்களின் கற்ப்புக்கும் பங்கம் விளைவிக்கும்
நாமே முன்னின்று நடத்தும் இப்படிப்பட்ட விழா யார் பெயரால் நடத்தப்படுகின்றது..? இந்த
ராவுத்தரப்பா பெயரில் தானே யாருடைய கணவிலாவது வந்து ராவுத்த்ரப்பா இப்படி உங்களைச்
செய்ய சொன்னார்களா…?
அல்லாஹ்
சுவர்க்கத்திற்க்கு அலகிய நருமனம் வீசக்கூடிய காற்றையும் நரகத்திற்க்கு நெருப்பையும்
கூறுகின்றான். ஆனால் நாம்மில் பலர் கபுருக்கு அருகில் ஊது பத்தி என்ற நெருப்பை ஏற்றி
அந்த பாவாவிற்க்கு நரக வேதனையைத் ததுகிறார்கள். கண்டிப்பாக இதற்க்கான தண்டனை நாளை மறுமை
நாளில் அனைவருக்கும் உண்டு.
இப்படி
செய்வதனால் மறுமைநாளில் ராவுத்தரப்பா நம் அனைவர்மீதும்
பழிசுமத்தி வழக்காடும் நிலை வரும். அந்த நாட்க்கள் வெகுதூரத்தில் இல்லை… நாம் எல்லாம்
இஸ்லாமியர்கள் என்ற ஒரேகாரணத்தினால் இதைச் சொல்கின்றேன்… நாம்மெல்லாம் சத்தியமார்க்கத்திர்க்கு
கட்டுப்பட்டவர்கள் என்பதினால் இதைச் சொல்கின்றேன்… நாமொல்லாம் இணைவைப்பு, சிர்க்குகளுக்கு
எதிரிகள் என்பதனால் இதைச்சொல்கின்றேன்… இப்படிப்பட்ட இழின்செயளிள் இருந்து நமதூரை பாதுகாக்க
வேண்டிய கடமை நம் ஒவொருவர் மீதும் உள்ளது அதை மணதில் வைத்து நம் அனைவரும் செயல்படவேண்டும்.
எனவே
அன்புச் சகோதரர்களே நிச்சயமாக கந்தூரி, அதன் பெயரில் அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு
சடங்குகள் செய்வது ஆகிய அனைத்தும் அல்லாஹ் விற்க்கு இணைக்கற்ப்பிப்பது போன்றதாகும்.
ஹராமான செயல்கள் இதைச் செய்கின்றவர்கள், செய்யத்தூண்டுபவர்கள், இதில் களந்துகொள்கின்றவர்கள்
அனைவரும் மார்க்கதுக்கு புரம்பான மாற்று மதத்தாரின் கொள்கையைப் பின்பற்றக்கூடியவர்கள்.
அல்லாஹ் இப்படிப்பட்ட செயல்களை கூறும் பொழுது அறியாமைக்காலச் செயல்கள் என்றுதான் திறுமரையாம்
குர் ஆனில் கூறுகின்றான் இந்த அறியாமைக்கால செயல்களில் இருந்து நம் அனைவறையும் காத்துக்
கொள்வேம். நாளை மறுமையில் நமக்காக சொர்க்கத்தில் நுலைவிக்ககூடிய செயல்களைச் செய்வோம்…
நரக நெருப்பில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வேம்.
எப்படி
அம்மாப்பட்டிணத்தில் வட்டி ஒலிக்கப்பட்ட ஊர் என்று அதன் நுளைவாயிலில் போடப்பட்டுள்ளதே
அதேபோல் நமதூரில் வட்டி, விபச்சாரம் ஆகிய இஸ்லாத்திர்க்கு எதிரான அனைத்தும் ஒழிக்கப்பட்ட
ஊர் என்று வரவேண்டும்.
இதன்
மூலம் பயனடைகின்றவர்கள் இதர்க்காக போர்க்கொடி தூக்குவார்கள் அதைக்கண்டு அஞ்சவேண்டாம்
நாம அல்லாஹ்விற்க்கு கட்டுப்பட்டவர்கள். இதன் பயன் அவர்களுக்கு இம்மையில் என்றால் இதை
எதிர்ப்பவர்களுக்கு பலம் மறுமையில் சகோதரர்கலே.
இன்ஷா
அல்லாஹ் வருகின்ற வருடம் இவை அனைத்தும் ஒழிய நாம் பாடுபடவேண்டும். இதர்க்காக அனைவரும்
தம் பங்களிப்பைதர தயாராக இருக்கவேண்டும் துவாச் செய்யுங்கள்…
இதை எதிர்ப்பவர்கள் யாராக
இருந்தாளும் அவர்களுக்காக வாருங்கள் வழக்காடுவேம் மறுமையிலே அல்லாஹ்விடத்தில். வஸ்ஸலாம்.
தொடர்புக்கு : kottaipatinam@hotmail.com
இது தான் இறையச்சமா...?
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.